சனி, 7 செப்டம்பர், 2013

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் அடையாளங்கள்..

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் அடையாளங்கள்.. ஆதாரப்பதிப்பு 2

வெளிப்படுத்தல் 22:20. இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்றவர். வரப்போகிறார். அதற்க்கான கால நடப்புகள் ஆரம்பித்து விட்டன. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்களை முன் பதிவில் வெளியிட்டேன். இப்பதிவில் இரண்டு அடையாளங்களை இணைத்துள்ளேன். இன்னும் பல ஆதாரங்களை விரைவில் வெளியிடுகிறேன்.

4. அறிவு பெருகும்

தானியேல் 12:4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.

எந்த நூற்றாண்டிலும் இல்லாத ஓர் வளர்ச்சியை இந்த நூற்றாண்டு அறிவியல் பூர்வமாக சந்தித்திருகின்றது. கணிப்பொறியில் அதிவேக வளர்ச்சி, கருத்தரிக்காமல் குழந்தை பெறுவது, உடல்பகுதிகளை மாற்றி அமைப்பது, விண்வெளி ஆராய்ச்சி என்று பலகட்டங்களையும் தாண்டி வருகிறது,.

இறுதிகாலத்தில் அறிவு பெரிகுபோகும் என்று சொன்ன தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி கொண்டிருகிறது, இன்று வேலையில் சேரவேண்டும் என்றால் புத்தக அறிவு மட்டும் போதாது காலசூல்நிளைகளை கையாளும் அறிவும் இருக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்த உண்மைதானே.

இன்று முகபுத்தகம் (FACEBOOK), கூகிள் (GOOGLE) வழியாக உலகத்தின் எந்த மூலையையும் அடையலாம் என்பது நமக்கும் தெரிந்த விஷயம்.

இந்த அறிவு வளர்ச்சியும் 19ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது. அதுவரை கண்டுபிடிப்புகள் அதிகம் இல்லை. ஆனால் 19 மற்றும் 20ம் நூற்றந்துகளில் புதிய கண்டுபிடிப்புகள் வருடம்தோறும் வர ஆரம்பித்துவிட்டன. நாடுகள் இடையில் இதற்கு போட்டி. பல நாடுகள் இந்த போட்டியில் தாக்கு பிடிக்க முடியாமல் பின் தங்கி விட்டன.

1. technology development -

வெளிபடுத்தல் 13:15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. 16. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,

17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. 18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

இந்த பகுதியில் சில காரியங்களை ஆராய்வோம்..
1. முத்திரை
2. எல்லோரும் இந்த முத்திரையை பெற்றுகொள்வர்
3. இந்த முத்திரை இல்லாமல் பொருள் வாங்க முடியாது
4. இந்த முத்திரை இல்லாமல் பொருள் விற்க முடியாது
5. இதில் ஞானம் விளங்கும். அதாவது அறிவுப்பூர்வமானது.
6. இது கணக்கு பார்க்க கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய உலகத்தில் இது எவ்வளவு உண்மை என்று நம் எல்லோருக்கும் தெரியும். இதை இன்று barcode என்கிற ஓர் வளர்ச்சி மூலம் அறியலாம். மேலை நாடுகளில், நம் இந்திய திருநாட்டின் பல பகுதிகளில் இந்த வளர்ச்சி கரை கண்டுள்ளது. இந்த barcode இல்லாமல் நீங்கள் எந்த ஓர் பொருளையும் விற்க முடியாது கொடுக்க முடியாது. இது அந்த பொருளின் மதிப்பை கொடுக்கும், நீங்கள் செலுத்தவேண்டிய பணத்தை குறிக்கும். இந்த barcode எல்லாவற்றையும் முடிவு செய்யும். இந்த வசனத்தின் ஓர் நிறைவு பகுதிதான் இந்த வளர்ச்சி. இன்னும் பல வரும் என்று எதிர்பார்க்கலாம்.

2. Global Positioning Systems (GPS) - உலக பொருத்துதல் முறை

இந்த புதிய தொழில்நுட்பம் மனிதனின் அதிவேக வளர்ச்சியை குறிக்கிறது. இதை வைத்து மனிதன் இன்னொரு மனிதனை எந்த மூலையில் இருந்தாலும் துணைக்கோள் (SATELLITE) மூலம் கண்டு பிடித்துவிடலாம். இதற்கு பல புதிய ஆய்வுகள் இருந்தாலும் முக்கியமாக RFID Radio Frequency Identification என்பதை பற்றி சில கருத்துக்களை பதிகிறேன்.

இந்த அதிர்வெண் (frequency 1998 by the British scientist Kevin Warwick) கண்டுபிடுப்பு 1998ம் ஆண்டு கெவின் அவர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சிறிய ஓர் அரிசி அளவில் இருக்கும் இதை எங்கு வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். இதை நீங்கள் எந்த பொருள் மீது பதிகிரீர்களோ அந்த பொருள் இருக்கும் இடத்தை நீங்கள் கண்டுபிடித்து விடலாம்.

மேலை நாடுகளில் இதனை தாங்கள் வளர்க்கு செல்ல பிராணிகள் உடலில் செலுத்தி பயன்படுத்துகின்றனர். இதன் விலை ஒரு அமெரிக்க டாலர் தான். ($1). இதை மனிதன் உடலில் பயன்படுத்துவது மூலம் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து விடலாம். வெளிபடுத்தல் 13:18 அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது என்கிற வசனம் நிறைவேரிகொண்டிருப்பதை காணலாம்.

இந்த வளர்ச்சி இப்போ மனிதனை நோக்கி சென்று கொண்டிருகிறது. பல நாடுகள் இதை தங்கள் ராணுவத்தில், விமானத்தில், போக்குவரத்து, ஆழ்பகுதி ஆராய்ச்சியில் பயன்படுத்த திட்டம் வகுத்துள்ளனர்.
http://en.wikipedia.org/wiki/Microchip_implant_%28human%29
http://en.wikipedia.org/wiki/Radio-frequency_identification
http://www.bbc.co.uk/news/health-22540374
http://www.newscientist.com/article/dn3217-first-cloned-baby-born-on-26-december.html#.UilzQiKIwlk

3. கணினி கட்டமைப்பு / இணையதளம் - (NETWORK/internet)

இடது இல்லாமல் இன்று மனிதன் கிடையாது என்கிற நிலைமைக்கு வந்துவிட்டான். இதற்க்கு யாரும் விதிவிலக்கு அல்ல. மற்றவரிடம் பேசுவதற்கும், பகிர்வதற்கும் பயன்பட்டுவந்த இந்த வளர்ச்சி இன்று மனிதனின் பல ஆராய்சிகளுக்கும், அழிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதை எல்லோரும் நல்லது என்று ஏற்றுகொண்டனர். ஆனால் இதில் உள்ள அழிவுகள் யாருக்கு தெரியும்?

அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் இந்த அறிய கண்டுபிடிப்பு ஓர் நொடி நின்றாலே பல கோடி நஷ்டம் ஏற்ப்பட்டு விடுகிறது. இதை பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது.

தேவனின் இரண்டாம் வருகையை குறித்து பேசும் பொது சில மிருகங்களை குறித்து பேசுகிறார்.
வெளிபடுத்தல் 13:3.பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, 4. அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். 5. பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது;

இதில் பூமியில் உள்ள யாவரும் பார்க்கும் வண்ணமாக ஓர் மிருகம் எழும்பும் என்று எழுதப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டு வரை இந்த வசனம் நிறைவேறும் என்று யாருக்கும் தெரியாது. NETWORK
என்கிற ஓர் அறிய கண்டுபிடுப்பின் மூலமாக தேவன் தன் வார்த்தையை நிருபித்துவிட்டார். இந்த மிருகத்தின் துணை இல்லாமல் எந்த மனிதனும் கிடையாது என்கிற நிலைமைக்கு உலகம் போய் கொண்டிருகிறது, இன்று கிராமப்புறங்களில் வசிக்கும் பாட்டி கூட செல்போனில் பேசுவது சாதாரண கதையாகி விட்டது. இந்த வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதை வைத்திருப்பவன் பெருமையாக பேசுவான். இன்று உலகம் "ஆப்பிள்" மொபைல் வைத்திருப்பவனுக்கும் "நோக்கியா" மொபைல் வைத்திருப்பவனுக்கும் வித்தியாசம் பார்க்க ஆரம்பித்து விட்டது. வாலிபர்கள் யார் அதிக விலை உள்ள செல்போனே/ ipad / ipod/ கணினி வைத்திருகிறார்கள் என்று போட்டி போடா ஆரம்பித்துவிட்டனர்.

இதுதான் இந்த மிருகத்தின் வெளிப்பாடு. வசனம் 5:5. பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; இந்த மிருகம் தூசணத்தை பேசும் வாய்..
கண்களின் இச்சை மற்றும் மாம்சத்தின் பெருமை என்று பாவத்தை குறித்து உணர்த்தும் வசனங்கள் இந்த வளர்ச்சி மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன..

உங்களை அதிர வைக்கபோகும் சில உண்மைகள்.... எத்தனை சதவீதம் பேர் செக்ஸ் வலைத்தளங்களுக்கு அடிமையாக இருகிறார்கள் என்று பார்ப்போம்.

1. இந்தியாவில் 80% பள்ளிபருவ மாணவ மாணவிகள் The New Indian Express, July 30, 2013
2. united kingdom பொது வலைத்தளங்களை விட 3 மடங்கு பயன்படுத்தப்படுகிறது. The Business Standard, July 30, 2013
3. 64% ஆஸ்திரேலிய குழந்தைகள் இதை பார்க்கின்றனர். WA Today Australia, July 22, 2013
4. 19000 பெற்றோர்களிடம் கேட்டதில் அவர்களின் குழந்தைகள் 6 வயதிலேயே ஆபாச வலைத்தளங்களை பார்கின்றனர்.
5. வலைதள பயன்பாட்டில் 30% ஆபாச வலைத்தளங்களை பதிவிறக்க பயன்படுகிறது. இதில் 70% ஆண்களும் 30% பெண்களுன் அடங்குவர். ZeeNews India, May 5, 2013
4. இந்தியாவில் கிராமப்புறங்களில் வாழும் பள்ளி மாணவர்கள் 70% பேர் இதற்கு அடிமைகளாக உள்ளனர். The Indian Express, 2-27-13
5. 18-34 வயதுள்ள ஆண்களில் 70% பேர் ஆபாச வலைத்தளங்களை மாதத்தில் ஒருமுறையாவது பார்த்துவிடுகின்றனர். Medical Daily, January 20, 2013
6. அதிகமாக பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 27, 2012
7. 67% ஆண்களும் 49% பெண்களும் இப்படிப்பட்ட வலைத்தளங்களை வரவேற்றுள்ளனர்.
8. போன் மூலம் பரவும் ஆபாசங்கள் ஒரு வருடத்தில் 750 லட்சம் வரை லாபம் ஈட்டி உள்ளது.
9. Cathnews India, October 12, 2011 300 சிறுவர்களிடம் கேட்டதில் 67% பேர் மொபைல் மூலம் இதை பார்க்கின்றனர்.
10. Independent Online, 9-27-11 90% teenage பருவத்தில் உள்ளவர்கள் இதற்கு அடிமையாக உள்ளனர்.
11. ஓர் ஆபாச வலைத்தளம் ஒன்றை மாதம் ஒன்றிற்கு 4.4 கோடி பேர் பார்க்கின்றனர். http://digitaljournal.com/article/322668
12. ஆபாச வலைத்தளங்களுக்காக ஒவொவொரு நொடியும்
$3,075.64 செலவிடப்படுகிறது
28,258 பேர் பார்க்கின்றனர்
372 பேர் புதிய பகுதிகளை தேடுகின்றனர்.
13. ஒவொவொரு 39 நிமிஷத்திர்க்கும் ஓர் புதிய ஆபாச காணொளி பதிவேற்றப்படுகிறது.
14. சீன தேசத்தின் வருமானம் $27.40 கோடி
ஜப்பான் தேசத்தின் வருமானம் $19.98 கோடி
கொரிய தேசத்தின் வருமானம் $25.73 கோடி
15. ஓர் நாளில் 116,000 முறை தினமும் குழந்தைகள் ஆபாசத்தை பலர் தேடுகின்றனர்.
16. 100,000 குழந்தைகள் ஆபாச தளங்கள் உள்ளன.
17. ஓர் நபர் ஆபாச வளையத்தை பார்க்கும் சராசரி வயது 11
http://internet-filter-review.toptenreviews.com/internet-pornography-statistics.html
http://www.covenanteyes.com/2013/02/19/pornography-statistics/

வெளிபடுத்தல் 13:6. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையம், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.

7. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட பாவத்திற்கு இடம்கொடாமல் தேவனுக்கு உண்மையாய் இருக்க ஒப்பு கொடுப்போம்.

5. கொடியகாலங்கள்

2 திமோத்தேயு 3:1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.
This know also, that in the last days perilous times shall come.

அறிவியல் வளர்ந்த இந்நாட்களில் மனிதனை வெட்டுவது, பெண்களின் கர்ப்பை சூறையாடுவது, குழந்தை கடத்தல், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருகிறார்கள்.

மதத்தின் பெயரால் அடுத்தவர்களின் வாழ்க்கையை சீரழிப்பது, கடவுள் சொன்னார் என்று தீக்குளிப்பது, மற்ற நாடுகளை குண்டு வைத்து அழிப்பது என்று பல கொடூரங்களை மனிதன் நிறைவேற்றி கொண்டிருக்கிறான்.

http://listverse.com/2008/01/01/top-10-worst-school-massacres/
https://www.causes.com/causes/7710/updates/47448
http://www.who.int/mental_health/prevention/suicide/suicideprevent/en/
http://www.cbsnews.com/8301-201_162-57559285/a-look-at-the-worlds-worst-mass-shootings/

கொலை என்பது காயின் ஆபேல் காலத்தில் இருந்தே உள்ளது. ஆனால் இன்று கொலைகளின் அளவு என்ன? எதற்காக? சில வரிகள் உங்களுக்காக

ஆப்கானிஸ்தான் - இன்று பெண்கள் அதிக அளவில் கொடுமைபடுத்தப்படும் நாடு. இங்கு வாழும் 90% இஸ்லாமிய பெண்கள் கொடுமைபடுத்தப்படுகின்றனர். கற்பழிக்கப்பட்ட பெண்கள் கற்பழித்தவனையே திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம்... மறுத்தல் அப்பெண் கொலை செஇயபடுவால். 2012 மட்டும் 240 கொலைகளும் 160 கற்பழிப்பு வழக்குகளும் பதிவாகி உள்ளன. இன்னும் திரைமறைவில் பல லட்சம் இருக்கிறது,

கம்போடியா - 2008 ம் ஆண்டு 468 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன... வருடம்தோறும் 2.4% இது அதிகரித்து வருகிறது.

கனடா - இங்கு வாழும் 3ண்டில் ஓர் பெண் துன்புறுத்தப்படுகிறாள். இதில் 6%தான் காவல் துறைக்கு வருகிறது.

காங்கோ - இங்கு ஒரு வருடத்திற்கு 400,000 பெண்கள் கற்பழிக்கபடுகிறார்கள். http://www.theguardian.com/world/2011/may/12/48-women-raped-hour-congo

எத்தியோபியா - இங்கு வாழும் 60% பெண்கள் கற்பழிக்கபடுகிறார்கள். இதில் அதிகமாக ஈடுபடுவது இவர்களுக்கு காவல் இருக்கும் ராணுவம் தான்.

இந்தியா - கற்பழிப்பு (1998 - 2008) பத்துவருடங்களில் இரண்டு மடங்காகி விட்டது. ஓர் நிறுவனம் நடத்திய ஆய்வில் 76% பெண்கள் சிறுவயதிலேயே கற்பளிக்கப்படுகார்கள். 40% குடும்ப ஆண்களே / உறவினர்களே இவர்களை பயன்படுத்துகின்றனர்.

ஆப்ரிக்கா - சிறுகுழந்தைகள் / சிறுமிகள் இங்கு கற்பழிக்க படுவது சாதாரண காரியமாகி விட்டது. ஒரே வருடத்தில் 67,000 சிறுமிகள் இங்கு கர்ப்பளிக்கப்பட்டனர். சமீபத்தில் 9 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து கற்பழித்தனர். 4 வயது சிறுமி தன தகப்பனால் கற்பழிக்கப்பட்டார்.

2002ம் ஆண்டு 8 மாத குழந்தை 4 பேரால் கற்பழிக்கப்பட்டது இந்த உலகத்தில் இதுவரை நடைபெறாத கொடுமை...

இங்கு வாழும் 37% ஆண்கள் ஒருவரையாவது கற்பழித்து இருக்கின்றனர்.

பாகிஸ்தான் - மதத்தின் பெயரால் இங்கு கர்ப்பளிக்கப்படும் பெண்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே வருகிறது. இஸ்லாமிய அடிப்பட்டை வாத தீவிரவாதிகள் இங்கு வாழும் இந்து கிறிஸ்தவர்களை கடத்தி கற்பழித்து தங்கள் மதத்திற்கு மாற்றுகின்றனர். ராவல்பிண்டி, இஸ்லாமாபாதில் வாழும் குழந்தைகள் 17% பேர் சிறுவயதிலேயே கற்பழிக்கப்பட்டுள்ளனர். இங்கு வாழும் பெண்களை அதிகமாக கற்பழிப்பது (20%) காவல்துறைதான். http://en.wikipedia.org/wiki/Rape_in_Pakistan

ஐக்கியராச்சியம் (UNITED KINGDOM) - இங்கு ஒரே வருடத்தில் 85,000 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். அதாவது தினமும் 230 பேர்..

அமேரிக்கா - 91% பெண்களும் 9% ஆண்களும் இங்கே கர்ப்பளிக்கபடுகின்றனர். இதில் 1% பெண்கள் ஆண்களை கற்பளிகின்றனர். 59% கற்பழிப்புகள் மறைக்கப்படுகின்றன. 800,000 அமெரிக்க குழந்தைகள் செக்சில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
http://en.wikipedia.org/wiki/Rape_statistics

சாதி அரேபியா - 1988ல் 21.9% இருந்த கற்பழிப்புகள் 2006ல் 56% ஆக அதிகரித்துவிட்டது.

எகிப்து - சபீபத்தில் நடந்த போராட்டதில் கலந்து கொண்டவர்கள் நான்கு நாட்களில் 91 பெண்களை கர்ப்பளித்துள்ளனர்.
http://www.dailymail.co.uk/news/article-2354477/Egypt-protests-2013-NINETY-ONE-women-raped-sexually-abused-Tahrir-Square-4-days.html

ஈரான் - 2000 ஆண்டில் ஒரே மாதத்தில் 30 பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டனர் .
http://atlasshrugs2000.typepad.com/atlas_shrugs/2013/07/statistics-.html
http://news.bbc.co.uk/2/hi/middle_east/975997.stm

இது கற்பழிப்பு மட்டும்தான். இன்னும் பல நாடுகளில் நடக்கும் கொலைகள் / விபச்சாரங்கள்/ போதைக்கு அடிமையாகும் பெண்கள்/ என்று நீண்டு கொண்டே போகும். இன்னொரு பதிவில் இவர்களை பற்றி வெளியிடுகிறேன்.

683,000 பெண்கள் ஒரே வடுத்தில் கற்பழிக்கப்படுகின்றனர்.
ஒரு மாதத்தில் - 56,916
ஓர் நாளில் - 1871
ஒரு மணிநேரத்தில் - 78
ஒவ்வொரு 1.3 மிஷத்திர்க்கு ஓர் பெண் உலகின் எங்கோ ஓர் மூலையில் கற்பழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார். இதை நீங்கள் படித்து முடிக்கும் முன் பல பெண்கள் தங்கள் கர்ப்பை இழந்திருப்பர்.
http://www.crimevictimservices.org/page/sexassault/76

வெளிப்படுத்தல் 12:12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

நீங்கள் பாவமான உலகத்தில் இருகிறீர்கள். பாவத்தை தண்ணீர்போல பருகும் உலகத்தில் இருகிறீர்கள். நீங்கள் எவ்வளவு ஆணை போட்டாலும் பாவம் சாத்தானால் ஏவப்படுவதை நிறுத்த முடியாது. இதை நான் முன் பதில்வில் வேதவசன ஆதாரத்தோடு கூரியிருகிரேன்.

காலங்கள் கொடியதாய் இருக்கின்றன. இந்த பிசாசு நம் வீட்டிற்க்குள் வராமல் இருக்க தொடர்ந்து ஜெபிப்போம். பிள்ளைகளுக்கு பரிசுத்த வேதாகமத்தில் உள்ளவற்றை கற்று கொடுப்போம். தேவனுடைய ராஜியத்திர்க்கென்று உருவாக்குவோம். ஆமென்.

நிச்சயம் இந்த வேத வசனங்கள் நிறைவேறும். இன்னும் பல தீர்க்கதரிசனங்கள் நிறைவேரிகொண்டிருகின்றன.. அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக