அக்கிரமக்காரரைக்
கண்டு நாம் பயப்படும் அளவுக்கு நல்லவர்களைக் கண்டால் நாம் மரியாதை
கொடுப்பதில்லை. அது போலவே பிசாசென்றால் அநேகருக்கு பயம். ஆனால் அந்த
அளவுக்கு தெய்வ பயம் நமக்கு தெய்வத்திடம் இருப்பதில்லை. அன்பு, இரக்கம்,
கிருபை எல்லாம் சாத்தானுக்கேது என்பதனாலாய் இருக்கலாம். இறைவன் அன்பின்
சொருபியாய் இருப்பதால் நாமும் தெய்வ பயமற்றிருக்கிறோம். அமெரிக்காவில்
மூன்று மாகாணங்களை இணைத்து குறுக்காய் ஓடும் 312 கிமீ நீளமுள்ள ஒரு
நெடுஞ்சாலைக்கு நெடுங்காலமாகவே U.S Route 666 என பெயரிருந்தது. வேதாகம
வெளிப்படுத்தல் புஸ்தகம் வசனத்தை ஆதாரமாக கொண்டு இது ஒரு "பேய்ச் சாலை"
(Devil's Highway) என அமெரிக்கர்கள் பயந்தனர்.பல திகில் படங்களும்
புஸ்தகங்களும் இதைக்கொண்டு வெளியாகின. அநேக விபத்துக்களும் அநியாயமாக
மக்கள் பலியாகுதலும் இங்கே நடைபெறுவதாக மக்கள் புகாரிட்டனர். விளைவு
2003-ல் அமெரிக்க அரசாங்கமே அதன் பெயரை U.S Route 666 ரிலிருந்து U.S.
Route 491என மாற்றிவிட வேண்டியது வந்தது. இப்படி பிசாசுக்கு பயப்படும்
ஜனங்கள், மனதுருகும் இறைவனுக்கோ எதிர்த்து நிற்கிறார்கள். நாமும்
அவ்வாறில்லாதிருப்போமாக.
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்
உங்களிடத்தில் இருக்கக்கடவது.தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும்
பயம். (II நாளாகமம் 19:7,நீதிமொழிகள் 8:13)
கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது.தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம். (II நாளாகமம் 19:7,நீதிமொழிகள் 8:13)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக