சனி, 7 செப்டம்பர், 2013

மறைக்கப்படும் உண்மைகள்..! பாகம் 07.

Arecibo வானிலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து கார்ல் சேகன், 1974ம் ஆண்டு நவம்பர் 16ம் திகதி ஒரு செய்தியை அனுப்பினார். அந்த செய்தியில் அவர் பூமி, சூரியக் குடும்பம் மற்றும் மனிதர்கள் சம்பந்தமான பல விவரங்களை இணைத்திருந்தார். நாம் பயன்படுத்தும் தசம இலக்கங்கள், மனிதர்களிலுள்ள அடிப்படை இரசாயன மூலகங்கள் (கார்பன், ஒட்சிசன், நைதரசன், ஐதரசன், பொஸ்பரஸ்) பற்றிய குறிப்புகள், DNA பற்றிய குறிப்புகள், DNA யின் வடிவம், மனிதனின் வடிவம், மனிதனின் சராசரி உயரம், பூமியின் சனத்தொகை, சூரியக் குடும்பமும் அதில் பூமியின் அமைவு, இந்தச் செய்திகள் அனுப்ப உதவிய ஆரசிபோ டெலஸ்கோப்பின் வடிவம் மற்றும் அதன் பருமன் ஆகிய அனைத்து விபரங்களுடன், அந்தச் செய்தி அனுப்பப்பட்டிருந்தது. அனுப்பப்பட்ட இடம் நமக்கு மிக அண்மையிலுள்ள M13 நட்சத்திரக் கூட்டங்களை நோக்கி. M13, நமக்கு மிக அண்மையில் உள்ளது என்று நான் சொன்னாலும், உண்மையில் அது இருபத்திதைந்து ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கிறது. நாம் ஒளியின் வேகத்தில் (300000 கிமீ/செக்கன்)சென்றால், அந்த நட்சத்திரக் கூட்டத்தை அடைய 25 வருடங்கள் நமக்குத் தேவை. அவ்வ்வ்வ்வ்வ்வளவு தொலைவு. அதாவது நாம் அனுப்பிய செய்தி அங்கு சென்றடையக் குறைந்தபட்சம் 25 வருடங்கள் தேவை.

http://3.bp.blogspot.com/-b2fbrLdHWvI/UiZU76WjhPI/AAAAAAAAAw0/EAUCdRZ9Evk/s1600/Crop+Circle.JPG

இந்தச் செய்தி அனுப்பும் போதே, இதற்குப் பதில் கிடைக்க வேண்டுமென்றால் 25 வருடங்களுக்கு அதிகமான காலம் தேவை என்று கார்ல் சேகன் கணித்தே வைத்திருந்தார். அவர் கணித்தது போலவே 27வருடங்களுக்குப் பின்னர் ஷில்போல்டனில் அந்தப் பயிர் வட்டங்கள் உருவாயின. பயிர் வட்டங்களில் இருந்த செய்தியை ஆராய்ந்தபோது கிடைத்த தகவல்கள் அதிர்ச்சிகரமானவையாக இருந்தது. எப்படிக் கார்ல் சேகன் தன் செய்திகளை வரைபடமாக்கி அனுப்பியிருந்தாரோ, அதே வடிவத்தில் பதிலும் இருந்தது. ஆனால் வந்த பதிலில், அவர்களின் உயிர், கார்பன், ஒட்சிசன் போன்றவற்றுடன் மட்டுமல்லாமல், மேலதிகமாகசிலிக்கோனினாலும் ஆக்கப்பட்டிருப்பதாகவும், DNA இன் அமைப்பிலும் உருவத்திலும் பெரும்பாலான மாற்றங்களுடனும், அவர்களின் சராசரி உயரம் 3 அடி 4 அங்குலம் எனவும், சனத்தொகை நம்மை விட மிக அதிகமெனவும் (12742213502 ஏலியன்கள்), அவர்களின் கோள் அமைந்துள்ள இடம், தாங்கள் தகவல் அனுப்பப் பயன்படுத்தும் டெலஸ்கோப்பின் உருவம், டெலஸ்கோப்பின் பருமன் ஆகியவை இருந்தன.

http://2.bp.blogspot.com/-5mwU4kEq-Fc/UiZVDFX9-ZI/AAAAAAAAAw8/CjQftWj9jXs/s1600/Crop+Circle.JPG

இங்குதான் மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஏலியன்கள் வரைந்ததாக கருதப்பட்ட அந்தப் பயிர்வட்டச் சித்திரத்தின் கீழ்ப் பகுதியில் வரையப்பட்டிருந்த ஏலியன்களின் டெலஸ்கோப்பினது வடிவமும், ஒரு வருடத்துக்கு முன்னர் உருவாக்கப்பட்ட 'ஃப்ராக்டல்' வடிவப் பயிர்வட்டச் சித்திரமும் ஒரே வடிவத்தில் இருந்தன. அப்படி ஒரு சித்திரம் ஒரு வருடத்துக்கு முன்னர் ஷில்போல்டனில் ஏன் உருவாக்கப்பட்டது என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிந்தது.

http://1.bp.blogspot.com/-BHoYKTjQ-pQ/UiZVLPfCpWI/AAAAAAAAAxE/8vkkGlAgYsY/s1600/Crop+Circle.JPG

ஒரு பயிர்ச் சித்திரத்தை ஏற்கனவே உருவாக்கி, பின்னர் அதே பயிர்ச் சித்திரத்தை உள்ளடக்கி வேறு ஒரு குறியீட்டு வகைப் பயிர்ச் சித்திரத்தை உருவாக்குவதென்பது மிகவும் சிக்கலான ஒன்றாகவேபார்க்கப்படுகின்றது. அத்துடன் இவையெல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட வேண்டுமென்றால், அதற்குத் தேவையான உழைப்பு என்பது மிக மிக அதிகமானது. அதற்குக் காலமும் அதிகம் தேவைப்படும்.ஆனால் ஒரே இரவில், நான்கு மணி நேரங்களில் உருவாக்கப்பட முடியாது. இவற்றை ஏலியன்கள்தான் உருவாக்கின என்பதற்கு இது ஒன்றே சாட்சியமாகவும் இருக்க முடியுமா என்று பார்த்தால், முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்தக் குறையையும் தீர்ப்பதற்கென்றே உருவானது இன்னுமொரு பயிர் வட்டம்.

இதைப் பார்த்ததும் இதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் கூட அதிர்ந்துதான் போனார்கள். ஒன்று இவையெல்லாம் ஏலியன்கள் மக்களுடன் தொடர்புகொள்ளும் மாபெரும் முயற்சி. இல்லையெனில் உலக மக்களையே மடையர்களாக்கும் முட்டாள்தனமான மனிதர்களின் மோசமான வேலையாக இருக்க வேண்டும். அந்தச் சித்திரமும் ஷில்போல்டனில் அமைந்தது போலவே இருந்தாலும், பயங்கரமானதும் சிக்கல் நிறைந்ததாகவும் இருந்தது. அதன் படத்தைப் பார்த்ததும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கே புரிந்து போகும்.

http://3.bp.blogspot.com/-pshMbdNZ0gg/UiZVSrEDhqI/AAAAAAAAAxM/vGBV0k0eGSc/s1600/Crop+Circle.JPG

2001ம் ஆண்டு ஷில்போல்டனில் உருவான முக அமைப்புடைய பயிர் வட்டம் தோன்றியதற்கு சரியாக ஒரு வருடத்தின் பின்னர், 2002ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி, இங்கிலாந்து க்ராப்வூட் (Grabwood) நகரத்தில் இந்தப் பயிர் வட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. இதுவரை ஏலியன்களின் முகங்கள் எப்படி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் நாம் இருந்தோமோ, அதே முகச் சாயலுடன் கூடிய பயிர் வட்டச் சித்திரமாக அது உருவாக்கப்பட்டு இருந்தது. அத்துடன் வட்டவடிவமான ஒருவித வினோத வடிவமும் அந்த உருவத்துடன் இணைந்து காணப்பட்டது.

வட்டத்திற்குள் பல வட்டங்களாக அது அமைந்திருந்தது. அந்த வட்டங்கள் எதைக் குறிக்கிறது என்று ஆராய்ந்தபோது, அது நாம் தற்சமயம் பாவிக்கும் சிடி(Compact Disc) போல இருக்கலாமோ எனச் சிந்திக்கத் தோன்றியது. சிடியில் எப்படி தகவல்கள் பதியப்பட்டிருக்கலாமோ, அது போல அந்த வட்டத்திலும் தகவலாக செய்திகள் இருக்கலாம் என்ற சந்தேகத்துடன், அதை ஆராய்ந்தபோது உண்மையிலேயே அதில் அப்படியே செய்திகள் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வட்டவடிவமாக இருந்த பயிர் வட்டத்தில் இருந்த செய்தி என்ன தெரியுமா?

அதனை அடுத்த பகுதியில் நாம் பார்க்கலாம்...

எழுதியவர்.. பதிவர் ராஜ்சிவா அவர்கள்.

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே குட்டி நாடு ... உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உல...கத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்

உலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது

உலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று 
அந்த நாடு தான் யூதர்களின் இஸ்ரேல்

இரண்டு நிமிடம் நேரம் ஒதுக்கி கண்டிப்பாக படிக்கவும் ....எச்சரிக்கைச் செய்தி. . . .

முழுவதும் படித்துவிட்டு மற்றவர்களுக்குப் பகிரவும்..
எனக்குத் தெரிந்த நண்பரின் வாழ்வில் நடந்த கொடுமை இது..
Internetல் எல்லா** தளங்களுக்கும் செல்பவர்..
ஒருநாள், அத்தளத்தில் 'அழகான தமிழ்ப் பெண்கள்'
என்ற தலைப்பில் இருந்த பகுதியைத் திறந்து பார்த்திருக்கிறார்..
நான்கைந்து பக்கங்களைப் பார்வையிட்டவருக்கு ஆறாவது பக்கத்தில் காத்திருந்தது பேரதிர்ச்சி...

ஆம்...!

அதில் அவரது 'தங்கையின்' புகைப்படமும் இருந்தது கூடவே அவரது அழகைப்பற்றிய அருவருப்பான commentகளும்..

நன்றாக யோசித்துப் பாருங்கள்...

ஒரு சராசரி** அண்ணனுக்கு இது எப்படி இருந்திருக்குமென்று..!

தங்கை வீட்டிற்கு வந்ததும் பளார்.. பளார்.. என்று அறைந்தவர்
இதுபற்றித் தங்கையிடமே நேரில் கேட்க,
அவரது தங்கை அங்கேயே மயங்கிவிழ..

ஓடிவந்து பார்த்த பெற்றோரிடம் எல்லாவற்றையும் போட்டு உடைத்தார்..
(அப்போது அவருக்கும் ஒரு பளார் கிடைத்ததாம்)

மயக்கம் தெளிந்து எழுந்த தன் தங்கையிடம் அந்த தளத்திலுள்ள அவரது படத்தைக் காட்டியபோது அவருக்குப் பேரதிர்ச்சி..

அண்ணா..
இது நான் Facebookல் வைத்திருக்கும் என்னுடைய Profile picture...

அப்போதுதான் அவருக்கு உறைத்தது..
#Facebookல் தன்னுடைய பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று Privacy settingsல் கொடுத்தது..

அதன்பிறகு,
உண்மை தெரிந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு settingsகளிலும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டார்..

இந்த நிகழ்வு எனது நண்பருக்கும் ஒரு பாடமாக அமைந்துவிட்டது..

இதனை இங்கே ஏன் சொல்கிறேன் என்றால்,
இந்த Facebook இன்றைய இளைய சமுதாயத்தில் எவ்வளவு ஆழமாக வேரூன்றிவிட்டதென்று எல்லோருக்கும் தெரியும்..

இது சரியா தவறா என்ற விவாதஞ்செய்யாமல்,
இதுபோன்ற மோசமான நபர்களும், தளங்களும் உலாவும் #இணைய உலகில் நம்மை நாமே
காத்துக்கொள்ளவேண்டும்..

இதற்கு,
நமது #பெண்கள் செய்யவேண்டியதெல்லாம்
ஒன்றே ஒன்றுதான்..

முகம் தெரியாத நபர்கள் 'நட்பிற்கான விடுகையைத் தரும்போது'
(friendship request),
அவற்றை எக்காரணங்கொண்டும் ஏற்றுக்கொள்ளவேண்டாம்..

ஏனெனில்,
உங்களது படத்தை எடுப்பதற்கான பெரும் வாய்ப்பை அவர்களுக்கு நீங்களே அளிக்கிறீர்கள்..

அப்படியொருவேளை இதில் விருப்பமில்லையென்றால்,
#உங்களது உண்மையான படங்களை எக்காரணங்கொண்டும் இங்கே பதிவேற்றாதீர்கள்..
இதுதான் மிகச்சிறந்தவழி..
இப்போதே இந்த மாற்றங்களைச் செய்யுங்கள்..

இது பெண்களுக்கு மட்டுமல்ல..

எல்லா ஆண்களும் இதனைப் படித்து தங்களுக்குத் தெரிந்தவர்களிடம் விளக்கமாக எடுத்துரையுங்கள்..

பொழுதுபோக்கிற்காக உலாவ வரும் பெரும்பாலோனோருக்கு,
இங்கே பல புறம்போக்குகளும் உலாவுகின்றனர் என்பதை எச்சரிக்கே இதை கைவலிக்க எழுதியுள்ளேன்..

தயவுசெய்து மற்றவர்களுக்கும் பகிருங்கள்..
நன்றி.

ஆரோக்கியமான கல்லீரல் வேண்டுமா ?

நமது கல்லீரல் நமது உடலின் முக்கியமான அங்கங்களில் ஒன்று. நமது உடலில் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு உறுப்பு இது. இதன் எடை 1.5 கிலோ கிராம். நமது உடலுக்குத் தேவையான கனிமப் பொருட்கள், வைட்டமின்கள் இவற்றை சேமிப்பதுடன், தேவைப்படும் போது புது புரதப் பொருட்களையும் உற்பத்திப் பண்ணுகிறது.

நாம் உண்ணும் உணவில் இருக்கும் கொழுப்புப் பொருட்களை செரிமானம் செய்வதற்கு வேண்டிய பித்தநீர் கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. நாம் எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் உள்ள நோயைக் குணப்படுத்த தேவையான பொருட்களை உடைத்து நம் உடல் அவற்றை உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. இரத்தம் உறையவும் கல்லீரல் உதவுகிறது. கல்லீரலைப் பற்றிய இன்னொரு சுவாரஸ்யமான விஷயம், இது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளவும் முடியும்.

கல்லீரலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுவது என்று பார்க்கலாம்:

மக்னீஷியம், மாவுச்சத்து, இரும்புச்சத்து நிறைந்த உணவு கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், உடலில் சேரும் நஞ்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும். நாள் முழுவதும் நிறையத் தண்ணீர் குடிப்பது அவசியம்.
அளவுக்கு அதிகமாக மது அருந்துவது 3 விதமான நோய்களை வரவழைக்கும். 1. ஆல்கஹாலிக் ஹெபடைடிஸ், (alcoholic hepatitis) 2. ஆல்கஹாலிக் சிர்ரோசிஸ் ( alcoholic cirrhosis) எனப்படும் ஈரல் நோய், 3. கொழுப்பு கல்லீரல் அல்லது ஃபேட்டி லிவர் (fatty liver). மது அருந்துவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளலாம். மது அருந்தாமலே இருப்பது உத்தமம்.
புத்துணர்ச்சி கொடுக்கும் (recreational drugs) மருந்துகள் கல்லீரல் திசுக்களை சேதப்படுத்தும். மருத்துவர்கள் கொடுக்கும் சில மருந்துகளும் நச்சுப் பொருள் கலந்ததாக இருக்கக்கூடும். மருத்துவர் குறிப்பிடும் அளவுக்கு மேல் இவைகளை சாப்பிட வேண்டாம்.
ஆர்கானிக் எனப்படும் உயிர்ம உணவுகள் ஆன்டிஆக்ஸிடென்ட் (antioxidants) நிறைந்து இருப்பதால், இவை கல்லீரலை பாதுகாத்து, நச்சுப் பொருள்களை வெளியேற்றி, சுத்தப்படுத்தவும் செய்கின்றன.
வண்ணப் பூச்சுக்கள், பூச்சி மருந்துகள் முதலியவற்றில் இருந்து வரும் நச்சு புகைகள், தூசுப் படலங்கள் நுரையீரலுக்குள் மிகச்சிறிய இரத்த நாளங்கள் வழியாக சென்று கல்லீரலை அடையக்கூடும். இதனால் கல்லீரல் பாதிக்கப்படும். இந்தப் பொருட்களைப் பயன்படுத்தும் போது பாதுகாப்புக் கவசம் அணிவது நல்லது.
உடற்பயிற்சி மிக அவசியம்.
ஹெபடைடிஸ் A மற்றும் B தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளுவது மிக இன்றியமையாதது.
கல்லீரலுக்கு நன்மை பயக்கும் சில உணவு வகைகள்:

பூண்டு: கல்லீரலில் சுரக்கும் நொதிநீர்களை தூண்டி நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

பச்சை காய்கறிகள்: பச்சையம் நிறைந்த பசலைக்கீரை, வெந்தயக்கீரை, புரோக்கோலி, முட்டைக்கோஸ் முதலிய நச்சுப் பண்பு நீக்கிகள் (detoxifiers) கல்லீரலுக்கு நல்லது.

மஞ்சள்: பொறியல் வகைகளுக்கு மட்டுமல்லாமல் உணவுப் பொருட்களில் இருக்கும் புற்றுநோய் காரணிகளை கல்லீரலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது.

எலுமிச்சை: காலையில் எலுமிச்சை சாறு குடிப்பது கல்லீரலை தூண்டுகிறது.

பீட்ரூட், காரட்: நச்சுப் பொருட்களை வெளியேற்ற இவை உதவுகின்றன.

இந்த உணவுப் பொருட்கள் பொதுவான ஆரோக்கியத்திற்கும் உதவும்.

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் அடையாளங்கள்..

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் அடையாளங்கள்.. ஆதாரப்பதிப்பு 2

வெளிப்படுத்தல் 22:20. இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்.

இதோ சீக்கிரமாய் வருகிறேன் என்றவர். வரப்போகிறார். அதற்க்கான கால நடப்புகள் ஆரம்பித்து விட்டன. இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கான அடையாளங்களை முன் பதிவில் வெளியிட்டேன். இப்பதிவில் இரண்டு அடையாளங்களை இணைத்துள்ளேன். இன்னும் பல ஆதாரங்களை விரைவில் வெளியிடுகிறேன்.

4. அறிவு பெருகும்

தானியேல் 12:4. தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்குமங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான்.

எந்த நூற்றாண்டிலும் இல்லாத ஓர் வளர்ச்சியை இந்த நூற்றாண்டு அறிவியல் பூர்வமாக சந்தித்திருகின்றது. கணிப்பொறியில் அதிவேக வளர்ச்சி, கருத்தரிக்காமல் குழந்தை பெறுவது, உடல்பகுதிகளை மாற்றி அமைப்பது, விண்வெளி ஆராய்ச்சி என்று பலகட்டங்களையும் தாண்டி வருகிறது,.

இறுதிகாலத்தில் அறிவு பெரிகுபோகும் என்று சொன்ன தீர்க்கதரிசனம் இன்று நிறைவேறி கொண்டிருகிறது, இன்று வேலையில் சேரவேண்டும் என்றால் புத்தக அறிவு மட்டும் போதாது காலசூல்நிளைகளை கையாளும் அறிவும் இருக்க வேண்டும் என்பது நமக்கு தெரிந்த உண்மைதானே.

இன்று முகபுத்தகம் (FACEBOOK), கூகிள் (GOOGLE) வழியாக உலகத்தின் எந்த மூலையையும் அடையலாம் என்பது நமக்கும் தெரிந்த விஷயம்.

இந்த அறிவு வளர்ச்சியும் 19ம் நூற்றாண்டில்தான் ஏற்பட்டது. அதுவரை கண்டுபிடிப்புகள் அதிகம் இல்லை. ஆனால் 19 மற்றும் 20ம் நூற்றந்துகளில் புதிய கண்டுபிடிப்புகள் வருடம்தோறும் வர ஆரம்பித்துவிட்டன. நாடுகள் இடையில் இதற்கு போட்டி. பல நாடுகள் இந்த போட்டியில் தாக்கு பிடிக்க முடியாமல் பின் தங்கி விட்டன.

1. technology development -

வெளிபடுத்தல் 13:15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. 16. அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,

17. அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. 18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

இந்த பகுதியில் சில காரியங்களை ஆராய்வோம்..
1. முத்திரை
2. எல்லோரும் இந்த முத்திரையை பெற்றுகொள்வர்
3. இந்த முத்திரை இல்லாமல் பொருள் வாங்க முடியாது
4. இந்த முத்திரை இல்லாமல் பொருள் விற்க முடியாது
5. இதில் ஞானம் விளங்கும். அதாவது அறிவுப்பூர்வமானது.
6. இது கணக்கு பார்க்க கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய உலகத்தில் இது எவ்வளவு உண்மை என்று நம் எல்லோருக்கும் தெரியும். இதை இன்று barcode என்கிற ஓர் வளர்ச்சி மூலம் அறியலாம். மேலை நாடுகளில், நம் இந்திய திருநாட்டின் பல பகுதிகளில் இந்த வளர்ச்சி கரை கண்டுள்ளது. இந்த barcode இல்லாமல் நீங்கள் எந்த ஓர் பொருளையும் விற்க முடியாது கொடுக்க முடியாது. இது அந்த பொருளின் மதிப்பை கொடுக்கும், நீங்கள் செலுத்தவேண்டிய பணத்தை குறிக்கும். இந்த barcode எல்லாவற்றையும் முடிவு செய்யும். இந்த வசனத்தின் ஓர் நிறைவு பகுதிதான் இந்த வளர்ச்சி. இன்னும் பல வரும் என்று எதிர்பார்க்கலாம்.

2. Global Positioning Systems (GPS) - உலக பொருத்துதல் முறை

இந்த புதிய தொழில்நுட்பம் மனிதனின் அதிவேக வளர்ச்சியை குறிக்கிறது. இதை வைத்து மனிதன் இன்னொரு மனிதனை எந்த மூலையில் இருந்தாலும் துணைக்கோள் (SATELLITE) மூலம் கண்டு பிடித்துவிடலாம். இதற்கு பல புதிய ஆய்வுகள் இருந்தாலும் முக்கியமாக RFID Radio Frequency Identification என்பதை பற்றி சில கருத்துக்களை பதிகிறேன்.

இந்த அதிர்வெண் (frequency 1998 by the British scientist Kevin Warwick) கண்டுபிடுப்பு 1998ம் ஆண்டு கெவின் அவர்களால் சேர்த்துக்கொள்ளப்பட்டது. சிறிய ஓர் அரிசி அளவில் இருக்கும் இதை எங்கு வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். இதை நீங்கள் எந்த பொருள் மீது பதிகிரீர்களோ அந்த பொருள் இருக்கும் இடத்தை நீங்கள் கண்டுபிடித்து விடலாம்.

மேலை நாடுகளில் இதனை தாங்கள் வளர்க்கு செல்ல பிராணிகள் உடலில் செலுத்தி பயன்படுத்துகின்றனர். இதன் விலை ஒரு அமெரிக்க டாலர் தான். ($1). இதை மனிதன் உடலில் பயன்படுத்துவது மூலம் அவர் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து விடலாம். வெளிபடுத்தல் 13:18 அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது என்கிற வசனம் நிறைவேரிகொண்டிருப்பதை காணலாம்.

இந்த வளர்ச்சி இப்போ மனிதனை நோக்கி சென்று கொண்டிருகிறது. பல நாடுகள் இதை தங்கள் ராணுவத்தில், விமானத்தில், போக்குவரத்து, ஆழ்பகுதி ஆராய்ச்சியில் பயன்படுத்த திட்டம் வகுத்துள்ளனர்.
http://en.wikipedia.org/wiki/Microchip_implant_%28human%29
http://en.wikipedia.org/wiki/Radio-frequency_identification
http://www.bbc.co.uk/news/health-22540374
http://www.newscientist.com/article/dn3217-first-cloned-baby-born-on-26-december.html#.UilzQiKIwlk

3. கணினி கட்டமைப்பு / இணையதளம் - (NETWORK/internet)

இடது இல்லாமல் இன்று மனிதன் கிடையாது என்கிற நிலைமைக்கு வந்துவிட்டான். இதற்க்கு யாரும் விதிவிலக்கு அல்ல. மற்றவரிடம் பேசுவதற்கும், பகிர்வதற்கும் பயன்பட்டுவந்த இந்த வளர்ச்சி இன்று மனிதனின் பல ஆராய்சிகளுக்கும், அழிவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதை எல்லோரும் நல்லது என்று ஏற்றுகொண்டனர். ஆனால் இதில் உள்ள அழிவுகள் யாருக்கு தெரியும்?

அனைத்து நாடுகளும் பயன்படுத்தும் இந்த அறிய கண்டுபிடிப்பு ஓர் நொடி நின்றாலே பல கோடி நஷ்டம் ஏற்ப்பட்டு விடுகிறது. இதை பற்றி பரிசுத்த வேதாகமம் என்ன சொல்கிறது.

தேவனின் இரண்டாம் வருகையை குறித்து பேசும் பொது சில மிருகங்களை குறித்து பேசுகிறார்.
வெளிபடுத்தல் 13:3.பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, 4. அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். 5. பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது;

இதில் பூமியில் உள்ள யாவரும் பார்க்கும் வண்ணமாக ஓர் மிருகம் எழும்பும் என்று எழுதப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டு வரை இந்த வசனம் நிறைவேறும் என்று யாருக்கும் தெரியாது. NETWORK
என்கிற ஓர் அறிய கண்டுபிடுப்பின் மூலமாக தேவன் தன் வார்த்தையை நிருபித்துவிட்டார். இந்த மிருகத்தின் துணை இல்லாமல் எந்த மனிதனும் கிடையாது என்கிற நிலைமைக்கு உலகம் போய் கொண்டிருகிறது, இன்று கிராமப்புறங்களில் வசிக்கும் பாட்டி கூட செல்போனில் பேசுவது சாதாரண கதையாகி விட்டது. இந்த வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதை வைத்திருப்பவன் பெருமையாக பேசுவான். இன்று உலகம் "ஆப்பிள்" மொபைல் வைத்திருப்பவனுக்கும் "நோக்கியா" மொபைல் வைத்திருப்பவனுக்கும் வித்தியாசம் பார்க்க ஆரம்பித்து விட்டது. வாலிபர்கள் யார் அதிக விலை உள்ள செல்போனே/ ipad / ipod/ கணினி வைத்திருகிறார்கள் என்று போட்டி போடா ஆரம்பித்துவிட்டனர்.

இதுதான் இந்த மிருகத்தின் வெளிப்பாடு. வசனம் 5:5. பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; இந்த மிருகம் தூசணத்தை பேசும் வாய்..
கண்களின் இச்சை மற்றும் மாம்சத்தின் பெருமை என்று பாவத்தை குறித்து உணர்த்தும் வசனங்கள் இந்த வளர்ச்சி மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளன..

உங்களை அதிர வைக்கபோகும் சில உண்மைகள்.... எத்தனை சதவீதம் பேர் செக்ஸ் வலைத்தளங்களுக்கு அடிமையாக இருகிறார்கள் என்று பார்ப்போம்.

1. இந்தியாவில் 80% பள்ளிபருவ மாணவ மாணவிகள் The New Indian Express, July 30, 2013
2. united kingdom பொது வலைத்தளங்களை விட 3 மடங்கு பயன்படுத்தப்படுகிறது. The Business Standard, July 30, 2013
3. 64% ஆஸ்திரேலிய குழந்தைகள் இதை பார்க்கின்றனர். WA Today Australia, July 22, 2013
4. 19000 பெற்றோர்களிடம் கேட்டதில் அவர்களின் குழந்தைகள் 6 வயதிலேயே ஆபாச வலைத்தளங்களை பார்கின்றனர்.
5. வலைதள பயன்பாட்டில் 30% ஆபாச வலைத்தளங்களை பதிவிறக்க பயன்படுகிறது. இதில் 70% ஆண்களும் 30% பெண்களுன் அடங்குவர். ZeeNews India, May 5, 2013
4. இந்தியாவில் கிராமப்புறங்களில் வாழும் பள்ளி மாணவர்கள் 70% பேர் இதற்கு அடிமைகளாக உள்ளனர். The Indian Express, 2-27-13
5. 18-34 வயதுள்ள ஆண்களில் 70% பேர் ஆபாச வலைத்தளங்களை மாதத்தில் ஒருமுறையாவது பார்த்துவிடுகின்றனர். Medical Daily, January 20, 2013
6. அதிகமாக பார்க்கப்பட்ட நாள் டிசம்பர் 27, 2012
7. 67% ஆண்களும் 49% பெண்களும் இப்படிப்பட்ட வலைத்தளங்களை வரவேற்றுள்ளனர்.
8. போன் மூலம் பரவும் ஆபாசங்கள் ஒரு வருடத்தில் 750 லட்சம் வரை லாபம் ஈட்டி உள்ளது.
9. Cathnews India, October 12, 2011 300 சிறுவர்களிடம் கேட்டதில் 67% பேர் மொபைல் மூலம் இதை பார்க்கின்றனர்.
10. Independent Online, 9-27-11 90% teenage பருவத்தில் உள்ளவர்கள் இதற்கு அடிமையாக உள்ளனர்.
11. ஓர் ஆபாச வலைத்தளம் ஒன்றை மாதம் ஒன்றிற்கு 4.4 கோடி பேர் பார்க்கின்றனர். http://digitaljournal.com/article/322668
12. ஆபாச வலைத்தளங்களுக்காக ஒவொவொரு நொடியும்
$3,075.64 செலவிடப்படுகிறது
28,258 பேர் பார்க்கின்றனர்
372 பேர் புதிய பகுதிகளை தேடுகின்றனர்.
13. ஒவொவொரு 39 நிமிஷத்திர்க்கும் ஓர் புதிய ஆபாச காணொளி பதிவேற்றப்படுகிறது.
14. சீன தேசத்தின் வருமானம் $27.40 கோடி
ஜப்பான் தேசத்தின் வருமானம் $19.98 கோடி
கொரிய தேசத்தின் வருமானம் $25.73 கோடி
15. ஓர் நாளில் 116,000 முறை தினமும் குழந்தைகள் ஆபாசத்தை பலர் தேடுகின்றனர்.
16. 100,000 குழந்தைகள் ஆபாச தளங்கள் உள்ளன.
17. ஓர் நபர் ஆபாச வளையத்தை பார்க்கும் சராசரி வயது 11
http://internet-filter-review.toptenreviews.com/internet-pornography-statistics.html
http://www.covenanteyes.com/2013/02/19/pornography-statistics/

வெளிபடுத்தல் 13:6. அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையம், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது.

7. மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது.

இப்படிப்பட்ட பாவத்திற்கு இடம்கொடாமல் தேவனுக்கு உண்மையாய் இருக்க ஒப்பு கொடுப்போம்.

5. கொடியகாலங்கள்

2 திமோத்தேயு 3:1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.
This know also, that in the last days perilous times shall come.

அறிவியல் வளர்ந்த இந்நாட்களில் மனிதனை வெட்டுவது, பெண்களின் கர்ப்பை சூறையாடுவது, குழந்தை கடத்தல், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருகிறார்கள்.

மதத்தின் பெயரால் அடுத்தவர்களின் வாழ்க்கையை சீரழிப்பது, கடவுள் சொன்னார் என்று தீக்குளிப்பது, மற்ற நாடுகளை குண்டு வைத்து அழிப்பது என்று பல கொடூரங்களை மனிதன் நிறைவேற்றி கொண்டிருக்கிறான்.

http://listverse.com/2008/01/01/top-10-worst-school-massacres/
https://www.causes.com/causes/7710/updates/47448
http://www.who.int/mental_health/prevention/suicide/suicideprevent/en/
http://www.cbsnews.com/8301-201_162-57559285/a-look-at-the-worlds-worst-mass-shootings/

கொலை என்பது காயின் ஆபேல் காலத்தில் இருந்தே உள்ளது. ஆனால் இன்று கொலைகளின் அளவு என்ன? எதற்காக? சில வரிகள் உங்களுக்காக

ஆப்கானிஸ்தான் - இன்று பெண்கள் அதிக அளவில் கொடுமைபடுத்தப்படும் நாடு. இங்கு வாழும் 90% இஸ்லாமிய பெண்கள் கொடுமைபடுத்தப்படுகின்றனர். கற்பழிக்கப்பட்ட பெண்கள் கற்பழித்தவனையே திருமணம் செய்ய வேண்டிய நிர்பந்தம்... மறுத்தல் அப்பெண் கொலை செஇயபடுவால். 2012 மட்டும் 240 கொலைகளும் 160 கற்பழிப்பு வழக்குகளும் பதிவாகி உள்ளன. இன்னும் திரைமறைவில் பல லட்சம் இருக்கிறது,

கம்போடியா - 2008 ம் ஆண்டு 468 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன... வருடம்தோறும் 2.4% இது அதிகரித்து வருகிறது.

கனடா - இங்கு வாழும் 3ண்டில் ஓர் பெண் துன்புறுத்தப்படுகிறாள். இதில் 6%தான் காவல் துறைக்கு வருகிறது.

காங்கோ - இங்கு ஒரு வருடத்திற்கு 400,000 பெண்கள் கற்பழிக்கபடுகிறார்கள். http://www.theguardian.com/world/2011/may/12/48-women-raped-hour-congo

எத்தியோபியா - இங்கு வாழும் 60% பெண்கள் கற்பழிக்கபடுகிறார்கள். இதில் அதிகமாக ஈடுபடுவது இவர்களுக்கு காவல் இருக்கும் ராணுவம் தான்.

இந்தியா - கற்பழிப்பு (1998 - 2008) பத்துவருடங்களில் இரண்டு மடங்காகி விட்டது. ஓர் நிறுவனம் நடத்திய ஆய்வில் 76% பெண்கள் சிறுவயதிலேயே கற்பளிக்கப்படுகார்கள். 40% குடும்ப ஆண்களே / உறவினர்களே இவர்களை பயன்படுத்துகின்றனர்.

ஆப்ரிக்கா - சிறுகுழந்தைகள் / சிறுமிகள் இங்கு கற்பழிக்க படுவது சாதாரண காரியமாகி விட்டது. ஒரே வருடத்தில் 67,000 சிறுமிகள் இங்கு கர்ப்பளிக்கப்பட்டனர். சமீபத்தில் 9 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து கற்பழித்தனர். 4 வயது சிறுமி தன தகப்பனால் கற்பழிக்கப்பட்டார்.

2002ம் ஆண்டு 8 மாத குழந்தை 4 பேரால் கற்பழிக்கப்பட்டது இந்த உலகத்தில் இதுவரை நடைபெறாத கொடுமை...

இங்கு வாழும் 37% ஆண்கள் ஒருவரையாவது கற்பழித்து இருக்கின்றனர்.

பாகிஸ்தான் - மதத்தின் பெயரால் இங்கு கர்ப்பளிக்கப்படும் பெண்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே வருகிறது. இஸ்லாமிய அடிப்பட்டை வாத தீவிரவாதிகள் இங்கு வாழும் இந்து கிறிஸ்தவர்களை கடத்தி கற்பழித்து தங்கள் மதத்திற்கு மாற்றுகின்றனர். ராவல்பிண்டி, இஸ்லாமாபாதில் வாழும் குழந்தைகள் 17% பேர் சிறுவயதிலேயே கற்பழிக்கப்பட்டுள்ளனர். இங்கு வாழும் பெண்களை அதிகமாக கற்பழிப்பது (20%) காவல்துறைதான். http://en.wikipedia.org/wiki/Rape_in_Pakistan

ஐக்கியராச்சியம் (UNITED KINGDOM) - இங்கு ஒரே வருடத்தில் 85,000 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். அதாவது தினமும் 230 பேர்..

அமேரிக்கா - 91% பெண்களும் 9% ஆண்களும் இங்கே கர்ப்பளிக்கபடுகின்றனர். இதில் 1% பெண்கள் ஆண்களை கற்பளிகின்றனர். 59% கற்பழிப்புகள் மறைக்கப்படுகின்றன. 800,000 அமெரிக்க குழந்தைகள் செக்சில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
http://en.wikipedia.org/wiki/Rape_statistics

சாதி அரேபியா - 1988ல் 21.9% இருந்த கற்பழிப்புகள் 2006ல் 56% ஆக அதிகரித்துவிட்டது.

எகிப்து - சபீபத்தில் நடந்த போராட்டதில் கலந்து கொண்டவர்கள் நான்கு நாட்களில் 91 பெண்களை கர்ப்பளித்துள்ளனர்.
http://www.dailymail.co.uk/news/article-2354477/Egypt-protests-2013-NINETY-ONE-women-raped-sexually-abused-Tahrir-Square-4-days.html

ஈரான் - 2000 ஆண்டில் ஒரே மாதத்தில் 30 பெண்கள் கற்பழித்து கொலை செய்யப்பட்டனர் .
http://atlasshrugs2000.typepad.com/atlas_shrugs/2013/07/statistics-.html
http://news.bbc.co.uk/2/hi/middle_east/975997.stm

இது கற்பழிப்பு மட்டும்தான். இன்னும் பல நாடுகளில் நடக்கும் கொலைகள் / விபச்சாரங்கள்/ போதைக்கு அடிமையாகும் பெண்கள்/ என்று நீண்டு கொண்டே போகும். இன்னொரு பதிவில் இவர்களை பற்றி வெளியிடுகிறேன்.

683,000 பெண்கள் ஒரே வடுத்தில் கற்பழிக்கப்படுகின்றனர்.
ஒரு மாதத்தில் - 56,916
ஓர் நாளில் - 1871
ஒரு மணிநேரத்தில் - 78
ஒவ்வொரு 1.3 மிஷத்திர்க்கு ஓர் பெண் உலகின் எங்கோ ஓர் மூலையில் கற்பழிக்கப்பட்டு கொண்டிருக்கிறார். இதை நீங்கள் படித்து முடிக்கும் முன் பல பெண்கள் தங்கள் கர்ப்பை இழந்திருப்பர்.
http://www.crimevictimservices.org/page/sexassault/76

வெளிப்படுத்தல் 12:12. இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

நீங்கள் பாவமான உலகத்தில் இருகிறீர்கள். பாவத்தை தண்ணீர்போல பருகும் உலகத்தில் இருகிறீர்கள். நீங்கள் எவ்வளவு ஆணை போட்டாலும் பாவம் சாத்தானால் ஏவப்படுவதை நிறுத்த முடியாது. இதை நான் முன் பதில்வில் வேதவசன ஆதாரத்தோடு கூரியிருகிரேன்.

காலங்கள் கொடியதாய் இருக்கின்றன. இந்த பிசாசு நம் வீட்டிற்க்குள் வராமல் இருக்க தொடர்ந்து ஜெபிப்போம். பிள்ளைகளுக்கு பரிசுத்த வேதாகமத்தில் உள்ளவற்றை கற்று கொடுப்போம். தேவனுடைய ராஜியத்திர்க்கென்று உருவாக்குவோம். ஆமென்.

நிச்சயம் இந்த வேத வசனங்கள் நிறைவேறும். இன்னும் பல தீர்க்கதரிசனங்கள் நிறைவேரிகொண்டிருகின்றன.. அடுத்த பதிவில் பதிவிடுகிறேன்.

கிறிஸ்துவின் பணியில்
தமிழ்நாடு கிறிஸ்தவ ஊழியங்கள்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

பழங்களின் மருத்துவ குணங்கள்

மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்

சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

உடல் மற்றும் மன நிலையை எடுத்துக் காட்டும் கருவளையம்

பொதுவாக கண்களைச் சுற்றியுள்ள பகுதியானது மிகவும் மிருதுவான அதிக கவனம் செலுத்த வேண்டிய சருமமாக உள்ளது. இதனை காக்க அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும்.

உறக்கமின்மை, மனக்கவலை, மகிழ்ச்சி, உடல் நலக் குறைவு, சோர்வு, மன அழுத்தம் என பல விஷயங்களை இந்த கருவளையம் காட்டிக் கொடுத்துவிடும்.

இது மட்டுமல்லாமல், பரம்பரை ரீதியாகவும், சத்துக் குறைவாலும் இந்த கருவளையம் ஏற்படுகிறது. எனவே ஒருவருக்கு கருவளையம் எதனால் ஏற்பட்டது என்று கண்டறிந்து அதன் மூலமாகத்தான் கருவளையத்தைப் போக்க வேண்டுமே ஒழிய, வெறும் கருவளையத்தைப் போக்க சிகிச்சை பெறுவது எந்த வகையிலும் பலன் தராது.

சிலருக்கு பரம்பரை ரீதியாகவே கருவளையம் ஏற்படலாம். அவ்வாறானவர்கள், சில முயற்சிகள் செய்வதால் ஓரளவுக்கு அதனை கட்டுப்படுத்தலாம். முழுவதுமாக போனாலும், அது மீண்டும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

உறக்கமின்மை காரணமாக சிலருக்கு கருவளையம் ஏற்படுகிறது. இது அவ்வப்போது வந்து, பின்பு மறைந்துவிடும். இதற்கு எந்த சிகிச்சையும் தேவையில்லை. நன்கு உறங்கினாலே போதுமானது. உறக்கம் குறையும் போது உருவாகும் கருவளையமானது, உங்களது உடல்நிலை எடுத்துக் காட்டும் கண்ணாடியாகவும் அமைகிறது.

சிலருக்கு சத்துக் குறைவால், கண்களுக்கு அருகே உள்ள சருமம் சுருங்கி அதனால் கருவளையம் தோன்றுகிறது. இதனை போக்க நல்ல சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும். புரதமம், நார்ச்சத்து, கொழுப்புச் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் தானாகவே இந்த கருவளையும் மறைந்து விடும்.

சிலருக்கு அதிகப்படியான பணி பளுவால் கருவளையம் ஏற்படுகிறது. அதிக நேரம் கணினி முன் அமர்ந்து பணியாற்றுபவர்கள், அதிக நேரம் கண் விழித்து வேலை செய்பவர்கள் அல்லது படிப்பவர்கள், தொடர்ந்து டிவி பார்ப்பவர்களுக்கும் இந்த கருவளையம் ஏற்படுகிறது.

எனவே, கண்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

இது மட்டுமல்லாமல், அதிக உடல் உழைப்பும், டென்ஷனும் கூட கருவளையத்தை ஏற்படுத்தலாம். வீட்டில் அனைத்து வேலைகளையும் ஒருவரே செய்யாமல், வேலைகளை பகிர்ந்து கொள்வதால், வேலை பளு குறையும், எனவே எல்லா வேலைகளையும் ஒருவரே செய்ய வேண்டும் என்று எண்ணாமல் வேலைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது பகிர்ந்து அளியுங்கள்.

சிலருக்கு ரத்த சோகை காரணமாகவும் கருவளையம் ஏற்படுகிறது. இரும்புச் சத்துள்ள உணவுகளையும், ரத்தத்தை அதிகரிக்க உதவும் காய்கறிகளையும் அதிகம் சாப்பிட்டு ரத்த சோகையை சரி செய்தால், இநத் கருவளையமும் தானாகவே மறைந்துவிடும். கீரை, நெல்லிக்காய், பீட்ரூட், நாவல்பழம் போன்றவற்றில் இரும்புச் சத்து உள்ளது.

எனவே, கருவளையம் வந்து விட்டதே என்று எண்ணி அதற்காக பல க்ரீம்களை போட்டு மன உளைச்சலுக்கு ஆளாகாமல், முதலில் எதனால் கருவளையம் வந்தது என்று கண்டறிந்து அதனை குணப்படுத்த முயலுங்கள். கருவளையம் தானாகவே சரியாகிவிடும்.

The purpose of the Law.

Does this mean that the Law is against God's promises? No, not at all! For if human beings had received a law that could bring life, then everyone could be put right with God by obeying it. But the scripture says that the whole world is under the power of sin; and so the gift which is promised on the basis of faith in Jesus Christ is given to those who believe.
But before the time for faith came, the Law kept us all locked up as prisoners until this coming faith should be revealed. And so the Law was in charge of us until Christ came, in order that we might then be put right with God through faith. Now that the time for faith is here, the Law is no longer in charge of us.
It is through faith that all of you are God's children in union with Christ Jesus. You were baptized into union with Christ, and now you are clothed, so to speak, with the life of Christ himself. So there is no difference between Jews and Gentiles, between slaves and free people, between men and women; you are all one in union with Christ Jesus. If you belong to Christ, then you are the descendants of Abraham and will receive what God has promised.

இஞ்சி சாறும்... பாட்டி வைத்தியமும்....

1. குழந்தைக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டால்... ஒரு டீஸ்பூன் கிரைப்வாட்டரில் இஞ்சி சாறு ஐந்து துளி, இந்தக் கலவையோடு சம அளவு தேன் கலந்து கொடுத்தால் கோளாறு சரியாகும்.

2. குழந்தைக்கு சளி தொந்தரவு ஏற்பட்டால்... ஆடாதொடா இலை மூன்று எடுத்து அதை ஆவியில் வேகவைத்து, பின்பு சுத்தமான வெள்ளைத்துணியில் அதைக் கட்டி சாறு பிழியவும். இந்த சாறில் ஐந்து துளியை ஐந்து துளி தேனில் கலந்து கொடுத்தால் பிரச்னை தீரும்.

3. குழந்தைக்கு மலச்சிக்கல் இருந்தால் உலர்ந்த திராட்சையில் ஐந்து எடுத்து, அதை நன்றாகக் கழுவிவிட்டு இருபது மில்லி தண்ணீரில் முதல்நாள் ஊறவைத்து, மறுநாள் காலை வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரைக் குழந்தைக்கு கொடுக்க மலச்சிக்கல் தீரும்.

4. இஞ்சிசாறு கூட சளிக்கு சிறந்த மருந்துதான். இஞ்சியைக் கழுவி, தோல் சீவிச் சுத்தமாக்கி, துண்டுகளாக வெட்டி, சுத்தமான ஒரு மெல்லிய துணியில் கட்டி, நன்றாக அடித்து நசுக்க வேண்டும். பின்னர் அந்த துணியைப் பிழிந்து சாறு எடுக்க வேண்டும். இந்த இஞ்சிச் சாற்றில் ஐந்து துளி எடுத்து, அதனுடன் சம அளவு தேன் கலந்து குழந்தைக்கு தரவேண்டும் இஞ்சியில் இருக்கும் காரத்தைத் தேன் கணிசமாக குறைந்துவிடும். ஜலதோஷம், இருமல் இரண்டுக்குமே இது நல்ல மருந்து.

5. மாதுளம் பழத் தோலை காயவைத்து பொடியாக்கி, அதில் ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து, தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் தடவினால் போதும்... சிறிது நேரத்தில் பேதி நின்றுவிடும்.

6. ஜாதிபத்ரி பொடியை ஐந்து கிராம் எடுத்து தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் வைத்தாலும் பேதி நிற்கும்.

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு...!!!!????

வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....?

வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள்.

திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள்,

அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள்.

உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து
மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்,

ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது

இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்...??

துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர்..! உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது..

நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது:

"தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும்,

ஒவ்வொரு முறை இரும்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும்,

இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ

ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.

மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது,

இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும்,

இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இரும்புவதால் ஏற்படும்
அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்"..

பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்..

இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்..

தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர்,

உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள்....!!!!

இள நரை மறையணுமா?

இன்றைய காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது.

முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது.

இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்­ணீரில் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம்.

சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும்.

சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும்.

சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில்.

கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும்.

இல்லையென்றால், கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும்.

இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு.

கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

பேன்களை ஒழிக்கும் சீத்தாப்பழ விதை!

சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. சீத்தாப்பழத்தில்-நீர்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

* சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

* சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

* இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

* விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

* சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

* சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

* சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

* சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

* சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பேன்களை ஒழிக்கும். பொடுகு காணாமல் போகும்.

* சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.
புதினா, கொத்தமல்லி இலையை மைய அரைத்து இரவு படுக்கப்போகும் போது உதட்டில் தடவி வர உதடு சிவப்பாக மாறும்.

· கடுகு, எலுமிச்சை பழச்சாறு, கிளிசரின், ரோஸ்வாட்டர் 3 சொட்டு அரைத்து தடவவும்.

· இரவு லிப்ஸ்டிக்கை எடுத்தவுடன் உதட்டின் மேல் கிளிசரின், பன்னீர் இரண்டையும் கலந்து தடவவும்.

· இரவு படுக்கும் முன் உதடுகளை மிருதுவாக்கக்கூடிய வெண்ணை தடவி படுக்க வேண்டும்.

· 15 நாட்களுக்கு ஒரிரு முறை பால் ஆடையுடன் சிறிது தேன் கலந்து உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடவும்.

உட‌ல் நலனு‌க்கு ஏ‌ற்றது நில‌க்கடலை

இருதய‌ம் பல‌‌வீனமாக இரு‌ப்பவ‌ர்க‌ள் முளைக‌ட்டிய ப‌ச்சை‌ப் பரு‌ப்பை சா‌ப்‌பி‌டுவது ந‌ல்லது.

முழு ப‌ச்சை‌ப் பரு‌ப்பு எலு‌ம்புக‌ள் வலுவடைய உதவு‌ம். முடி ‌நீ‌ண்டு வளரு‌ம். குட‌ல், க‌ல்‌லீர‌ல் முத‌லிய உறு‌ப்புகளு‌‌க்கு வலுவை‌த் தரு‌ம்.

உட‌லி‌ல் ஏ‌ற்படு‌ம் ர‌த்த‌ப் பெரு‌க்கை ‌நிறு‌த்தவு‌ம், மூ‌க்‌கி‌ல் ர‌த்த‌ம் வருவது, மாத‌வில‌க்‌கி‌ன் போது ஏ‌ற்படு‌ம் அ‌திக‌ப்படியான ர‌த்த‌ப் போ‌க்கு ஆ‌கியவ‌ற்றை ‌நிறு‌த்த ‌நில‌க்கடலை உதவு‌ம்.

ச‌ர்‌க்கரை நோயா‌ளிக‌ள் ‌தினமு‌ம் ஒரு கை‌ப்‌பிடி ‌நில‌க்கடலை சா‌ப்‌பி‌ட்டா‌ல், ச‌த்து குறை‌ந்து உட‌ல் மெ‌லிவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌ம். உடலு‌க்கு வ‌லிமை தரு‌ம், தசையை வள‌ர்‌க்கு‌ம்.

உட‌ல் வ‌லிமை பெற, மூ‌க்கடலை என‌ப்படு‌ம் கொ‌ண்டை‌க்கடலையை முத‌ல் நா‌ள் இர‌வி‌ல் ஊற வை‌த்து அடு‌த்த நா‌ள் த‌ண்‌ணீரை வடிக‌‌ட்டி ப‌ச்சையாக சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடலு‌க்கு ‌மிகவு‌ம் ந‌ல்லது.

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு..!

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

பொடுகு என்றால் என்ன ?

தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்த போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதைதான் நாம் பொடுகு என்கிறோம்.

பொடுகு ஏன் வருகிறது?

1. வரட்சியான சருமத்தினால் வரும்

2. அவசரமாக தலைக்கு குளிப்பது. நல்லா தலையை துவட்டுவது கிடையாது. இதனால் தண்ணீர்,சோ்பபு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு உற்பத்தியாகும்.

3. எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது

4. ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதனாலும் பொடுகு வரும்

5. “பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.

6. எக்ஸீமா(Eczema), சொறாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நொய்களாளும் பொடுகு வரலாம்

7. அதிகமாக சாம்பு பயன்படுத்தினாலும் வரலாம். க்ண்ட கண்ட செல்களை தலையில் தேய்ப்பதனாலும் இது வரலாம்.

8. மனஅழுத்தம் கவலையாலும் இது வரலாம்

பொடுகு வருவதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

1. ஒருவர் பயன்படுத்திய சீப்பு தலையாணை துண்டு போண்றவற்றை அடுத்தவர் பயன்படுத்தக்கூடாது

2. தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்ததிருக்க வேண்டும்

3. கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் முதலிய உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும். இதன் மூலம் பொடுகுக்கு காரணமான கிருமிகளிடமிருந்து நமது தலையை பாதுகாக்க முடியும்

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்யலாம்?

1. தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம். இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.

2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.“பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்கவும்.

3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15நிமிஷம் கழித்து குளிக்கனும்

4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிஷம் கழித்து குளிக்கவும்.

5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்

6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்கனும்.

7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரெம்ப நல்லது

8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.

9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்

10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்கலாம்

11. வசம்பு பவுடரை தேங்காய் எண்யெயில் ஊறவைத்து தேய்கலாம்

12. தலைக்கு குளித்தபின்பு தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து தலைக்கு குளித்து அதன்பின்பு துவட்டி கொள்ளலாம்.

13. மருதாணி இலையை அரைக்கனும். அதனுடன் கொஞ்சம் தயிர், எழுமிச்சை சாறு கொஞ்சம் சேர்கனும். இந்த கலவையை தலையில் தேய்கனும்.

14. வேப்பிலை கொஞ்சமும் அதனுடன் கொஞ்சம் மிளகையும் சேர்த்து நல்லா அரைத்து தலையில் தேய்த்து 1மணி நேரம் ஊரவைத்து பின்பு குளிக்கனும்.

15. தேங்காய் எண்ணையுடன் வேப்பை என்ணையும் சேர்த்து காய்ச்சி தேய்த்து வந்தால் பொடுகு நீங்கும்.

16. நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.

17. நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.

18. தேங்காய் எண்ணெயுடன் சிறிது கற்பூரத்தை போட்டு வைத்து, அந்த எண்ணெயை தொடர்ந்து தேய்த்து வந்தால் பொடுகு மறைந்துவிடும்.

19. பலசரக்குக் கடையில் காய்ந்த வேப்பம்பூ கிடைக்கும். உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் கேட்டு வாங்கி, அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.

20.ஆலிவ் எண்ணெயுடன் இஞ்சிச்சாறு சேர்த்து நன்றாக கலந்து தலைக்கு தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து ஊற வைத்து பிறகு குளித்து வந்தால் பொடுகு குறையும்.

கற்கள் நகரும் அதிசயம் – மரணப் பள்ளத்தாக்கின் மர்மம்!

நம்பமுடியாத நம்பிக்கைகள் பல நம்மில் நாடி, நாளங்களில் பாயும் குருதியாய் மாறி நம்பவேண்டிய சில நம்பிக்கைகளை நம்ப மறுக்கச் செய்யும் போது அவை ஒரு நாள் எம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே கொண்டுசெல்லும் பல விடயங்களில் ஒன்றாய் மாறியதே இந்த மரணப் பள்ளத்தாக்கும் நடமாடும் கற்களும்.அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘Death Valley National Park’ என பெயரிடப்பட்டுள்ள தேசிய பூங்கா ஏறத்தாள 1000 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்ட சொஸோன் என்று அறியப்பட்ட ‘டிம்பிஸா’ எனப்படும் ஒரு பழங்குடியினர் வாழ்ந்த பிரதேசமாகும்.

டிம்பிஸா பழங்குடியினரினால் டும்பிஸா என பெயரிடப்பட்டிருந்த இப்பள்ளத்தாக்கிற்கு ‘கலிபோர்னியா தங்க நெருக்கடி’ காலப்பகுதியில் அதாவது 1849ஆம் ஆண்டளவில் ‘Death Valley’ எனும் ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏனெனில் கலிபோனியா தங்க நெருக்கடி நேரத்தின் போது இந்த பள்ளத்தாக்கு வழியாக அமெரிக்கர்கள் அல்லாத குழுவொன்று கடந்து சென்றிருக்கிறது. அப்போது பயணித்தவர்களில் ஒருவர் இப்பகுதியில் வைத்து உயிரிழந்ததைத் தொடர்ந்து கனிய வள ஆய்வாளர்களால் Death Valley எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து 1850ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் குறித்த மரணப் பள்ளத்தாக்கில் ஆய்வுகள் மூலமாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்கள் பல சுரங்க ஆராய்ச்சிகள் மூலமாக பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி 1933ஆம் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான ஹுவரினால் 2 மில்லியன் ஏக்கர் பிரதேசமும் தேசிய ஞாபக சின்னமாக மாற்றப்பட்டது. மேலும் 1994ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் ஏக்கர் பிரதேசம் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதுவே அமெரிக்கா 4ஆவது பெரிய தேசிய பூங்காவாகும்.

தற்போது இப்பிரதேசத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தாண்டி டிம்பிஸா பழங்குடியினர் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை 1940ஆம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட வாழ்விடங்களில் தண்ணீர் மற்றும் தொலைபேசி வசதிகளுடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது சுற்றுப்பிரயாணிகளும் அங்கு சென்று வருகின்றனர். இதுவே இப்பிரதேசத்தின் மிகச் சுருக்கமான வரலாறு.

சரி, இதில் ஆச்சரியத்தக்க வகையில் என்னதான் இருக்கிறது? நம்ப மறுக்கும் அளவிற்கு என்னவென யோசிக்கத் தோன்றுகிறாதா? அவ்வாறு இந்த மரணப் பள்ளத்தாக்கில் இதுதான் நடைபெறுகிறது என ஆய்வாளர்களால் கூட அறிய முடியாத அளவிற்கு மர்மங்கள் அடங்கியிருப்பதே நிஜம்.

குறித்த மரணப் பள்ளத்தாக்கு பாலைவனத்திற்கும் மலைகளுக்கும் இடையில் காணப்படுகிறது. சாதாரணமாக கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் ஆள் நடமாட்டமோ பூச்சி புழுவோ தென்பட வாய்ப்பில்லாத அளவிற்கு பாலைவானத்தினைப் போன்று காட்சி தருகின்றது. ஆனாலும் கற்களின் நடமாட்டத்திற்கு மட்டும் பஞ்சமில்லை என்கின்றனர் புவியியல் ஆராச்சியாளர்கள்.

இந்த மர்ம பூமியில் கற்கள் தானாக இடம்பெயர்ந்து செல்கின்றன. 1948இலேயே இத்தகவல் வெளியாகியதும் ஏன்? எப்படி? என்ற எண்ணிலடங்கா கேள்விகளுடன் ஆராய்ச்சியாளர்கள் படையெடுக்க அங்கு ஆரம்பித்தனர். 1972 – 80ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாராய்ச்சிகள் தீவிரம் அடைந்தது. இருப்பினும் கல் தனது நகர்வைத் தொடர்ந்ததே தவிர ஆராய்ச்சிகளுக்கான விடைகள் நகர்ந்தபாடில்லையாம். நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் இந்த மர்மத்திற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

இங்குள்ள கற்கள் மூன்று வருடங்களில் முழுப் பிரதேசத்தையும் சுற்றி வருகிறது. இதனை நன்கு உணர முடிகிறது. ஏனெனில் அக்கற்கள் பணிக்கும் பாதையை கல்லின் சுவடுகளினூடாக தெளிவாகின்றது. கற்களின் பயணம் சில சமயங்களில் இரு கற்கள் ஒரே நேரத்தில் பயணிக் ஆரம்பித்து சமாந்தரமாக அப்பிரதேசத்தை சுற்றி வருகிறது.

இதேபோல சில சமயங்களில் தனியாக ஒவ்வொரு திசையிலும் பயணிக்கும். இதன்போது பின்னோக்கிய நகர்வினையும் சில சந்தர்ப்பங்களில் காணலாம். ஆனால் அதற்கான காரணத்தை மட்டும் கண்டுபிடிக்க முடியாதுள்ளது. ஆனால் அவை நகர்ந்துள்ள விதம், பயணித்த பாதை மட்டும் தெளிவாக இருக்கிறது.
இந்த மரணப் பள்ளத்தாக்கின் அருகே மலைத் தொடர் ஒன்று உள்ளது. இம் மலையிலிருந்து உடைந்து விழும் கற்களே இந்த மரணப் பள்ளத்தாக்கு முழுவதிலும் நடமாடுகிறது. இக் கற்கள் சுமார் 10 ஆயிரம் அடி நகர்கின்றது. சில சமயம் ஒரிரு அடிகள் வரை மட்டுமே நகரும்.

வெற்றுக் கண்களுக்கு புலப்படும் வகையில் இவை நகர்வது கிடையாது. பாரம் குறைந்த மிகச் சிறிய கல் ஆண்டொன்றுக்கு இரண்டரை அங்குலம் நகரும் அதே சமயம் 36 கிலோ கிராம் நிறையுள்ள பெரிய கல்லொன்று 659 அடிகள் நகர்ந்திருக்கிறது. கல்லின் நிறைக்கும் அவை நகர்வதற்குமான தொடர்புகள் எதுவும் இல்லை என்பதையே இவை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் இப்பகுதியில் கோடைகாலத்தில் சாதாரணமாக 49 பாகை செல்சியஸ் வெப்பநிலை காணப்படும். இங்கு அதிகூடிய வெப்பநிலையாக 1913 ஜுலை மாதம் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது. வரட்சியான காலத்தில் இப்பிரதேசத்தில் வெடிப்புகள் விழுந்து அவ்விடங்களில் ஐஸ் படர்ந்திருக்கும்.

கோடை தவிர்ந்த காலங்களில் ஒரு சில வகையான உயிரினங்கள் தோன்றி மறைகிறது. ஆனால் தொடர்ச்சியாக இங்கு வாழும் உயிரினங்கள் என எதுவுமில்லை.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு காரணம் என்ன? கற்கள் மர்மமாக நகர்வதற்கு இந்த பாலைவனமா அல்லது அங்குள்ள களி மண் தட்டா காரணம்? என குழப்பம் இன்னும் தீரவில்லை. ஒரு வேளை காற்றினால் என்றால்? அதுவும் இல்லையாம் ஏனெனில் அங்கு கடும் காற்று வீசுவதில்லை. எனவே அதற்கும் சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நிலத்துக்குள் இருக்கும் ஒருவித சக்தியினாலேயே கற்கள் இவ்வாறு நகர்கிறது என மெஸசெட்ஸ் பகுதி ஹெம்ஷயர் பல் கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இவ்வாறிருக்க அங்கு அமானுஷ்ய சக்தி, ஆவி, பேய் என மரணப் பள்ளத்தாக்கு என்ற பெயருக்கு ஏற்றவாறு புரளிகளுக்கு மட்டும் குறைவில்லையாம்.

ஆனால் அங்கு சுற்றுலா சென்றவர்களோ சுற்றுலாவுக்கு சிறந்த இடம் என மெச்சிக்கொள்கிறார்கள். இருந்தாலும் மரணப் பள்ளத்தாக்கிலுள்ள மர்மம் என்ன என்ற கேள்வியுடன் ஆராய்ச்சிகள் நகர்ந்துகொண்டேதான் இருக்கிறது கூடவே கற்களும் தான்.

ஆண்களின் தலைமுறை மாற்றங்கள்..

1.நம்ம அப்பாவெல்லாம் பெல்ஸ் பேன்ட்டும், கட்டம் போட்ட சட்டையும் தான் அதிகம் அணிந்தார்கள். நாம் ஜீன்சும் டீ ஷர்ட்டும் தான் அதிகம் அணிகிறோம்.

2.நம்ம அப்பாவெல்லாம் சீப்பை வைத்து தான் தலை வாரினார்கள். நமக்கு கைகளை சீப்பாக்கி தலைவாரினால் தான் பிடிக்கும்.

3.நம்ம அப்பாவெல்லாம் மீசையை வீரத்தின் அடையாளமாகப் பார்த்தார்கள். நாம் வயதின் அடையாளமாகப் பார்க்கிறோம். மீசை பெரிதாய் இருந்தால் வயதானது போல் தெரியும் என்று அடிக்கடி ட்ரிம் செய்து விடுவோம்.

4.நம்ம அப்பாவெல்லாம் மாதம் ஒரு முறை தலைமுடியை சுத்தமாக ஒட்ட வெட்டிவிடுவார்கள். நாம் மாதம் இருமுறை வெட்டினாலும் பட்டும் படாமல் தான் வெட்டுவோம்.இல்லைன்னா கடைக்காரரிடம் சண்டைக்கு போவோம்.

5.நம்ம அப்பாவெல்லாம் டிவிஎஸ் எக்ஸ்செல் வண்டிதான் ஓட்டினார்கள். நாம இப்ப அதையெல்லாம் வண்டியாகவே ஒற்றுக்கொள்ள மாட்டோம்.

6.நம்ம அப்பாவெல்லாம் முக்கியமான செய்தியை நேர்ல பாத்து தான் பேசுவாங்க. நாம எவ்ளோ பெரிய செய்தியையும் சின்னோண்டு சம்ஸ் ல முடிச்சுருவோம்.

7.நம்ம அப்பாவெல்லாம் அவங்க அப்பாகிட்ட வெளிய போறப்ப சொல்லிட்டு தான் போவாங்க. நாம போயிட்டு வந்துக் கூட சொல்ல மாட்டோம் எங்க போனோம்ன்னு.

8.நம்ம அப்பாவெல்லாம் கஞ்சிக்கே கஷ்டம்னாலும் கடன் வாங்க யோசிப்பாங்க.நாம கடன் வாங்கி கார் ரே வாங்குவோம்.

"வசதி வரலாம்; அசதி வரக்கூடாது!"

"வசதி வரலாம்; அசதி வரக்கூடாது!"
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்

"உங்கள் காலத்தில் இசையமைக்க 50, 100 வயலின் என்று பெரியதொரு திருவிழாக் கூட்டம்போல வாத்தியக் கோஷ்டி இருக்கும். இப்போது எலெக்ட்ரானிக் யுகம் வந்ததால் ஏற்பட்டது சாதகமா, பாதிப்பா?"

"எலெக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமென்ட்ஸால பாதிப்பு இருக்குனு சிலர் சொல்றாங்க. அதை நான் ஒப்புக்கமாட்டேன். அதை எப்படி யூஸ் பண்ணணும்னு தெரிஞ்சவங்க நல்லாவே செய்யலாம். அதைச் சரியா யூஸ் பண்ணத் தெரியாதவங்க செய்யும்போதுதான் அபஸ்வரமா இருக்கும். எலெக்ட்ரானிக் யுகத்தால் நம்ம மியூஸிக் கெட்டுப் போச்சுன்னு சொல்லமுடியாது. எங்க பீரியட்ல நாங்க கடுமையா உழைச்சு வாசிச்சோம். அதில் கிடைச்ச ஆத்ம திருப்தி, எலெக்ட்ரானிக் கருவிகள்ல ஒருவேளை கிடைக் காமல் இருக்கலாம். இத்தனைக்கும் எலெக்ட்ரானிக் கருவிகள்ல எல்லாவித சௌகரியங்களும் இருக்கு. எல்லாத்துக்கும் ஸ்விட்ச். அந்தக் காலத்துல என் தலையெழுத்து, நான் கஷ்டப்பட்டு ப்ராக்டீஸ் பண்ணினேன். இப்போ வர்ற இளைஞர்களுக்கு அப்படிஇல்லை. நான் 15 வருஷம் கத்துக் கிட்டதை அவங்க 15 நாள்லயும் கத்துக்கலாம்; 15 நிமிஷத்துக்குள் ளயும் கத்துக்கலாம். அவ்வளவு வசதியா போச்சு! என்னைப் பொறுத்தவரைக்கும் வசதி வர வர, அசதி வந்துவிடக்கூடாது என்பதுதான் முக்கியம்!"

01.05.1994/ஆனந்த விகடன்

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்

அக்கிரமக்காரரைக் கண்டு நாம் பயப்படும் அளவுக்கு நல்லவர்களைக் கண்டால் நாம் மரியாதை கொடுப்ப‌தில்லை. அது போலவே பிசாசென்றால் அநேகருக்கு பயம். ஆனால் அந்த அளவுக்கு தெய்வ பயம் நமக்கு தெய்வத்திடம் இருப்பதில்லை. அன்பு, இரக்கம், கிருபை எல்லாம் சாத்தானுக்கேது என்பதனாலாய் இருக்கலாம். இறைவன் அன்பின் சொருபியாய் இருப்பதால் நாமும் தெய்வ பயமற்றிருக்கிறோம். அமெரிக்காவில் மூன்று மாகாணங்களை இணைத்து குறுக்காய் ஓடும் 312 கிமீ நீளமுள்ள ஒரு நெடுஞ்சாலைக்கு நெடுங்காலமாகவே U.S Route 666 என பெயரிருந்தது. வேதாகம வெளிப்படுத்தல் புஸ்தகம் வசனத்தை ஆதாரமாக கொண்டு இது ஒரு "பேய்ச் சாலை" (Devil's Highway) என அமெரிக்கர்கள் பயந்தனர்.பல திகில் படங்களும் புஸ்தகங்களும் இதைக்கொண்டு வெளியாகின. அநேக விபத்துக்களும் அநியாயமாக மக்கள் பலியாகுதலும் இங்கே நடைபெறுவதாக மக்கள் புகாரிட்டனர். விளைவு 2003‍-ல் அமெரிக்க அரசாங்கமே அதன் பெயரை U.S Route 666 ரிலிருந்து U.S. Route 491என மாற்றிவிட வேண்டியது வந்தது. இப்படி பிசாசுக்கு பயப்படும் ஜனங்கள், மனதுருகும் இறைவனுக்கோ எதிர்த்து நிற்கிறார்கள். நாமும் அவ்வாறில்லாதிருப்போமாக.

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது.தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம். (II நாளாகமம் 19:7,நீதிமொழிகள் 8:13)

பயம்! பயம்! பயம்!

ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது ஞானி முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று வினவினார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.

இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை!

வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது.
இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை! வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும். உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும். பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும். இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம். இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது. வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது.